ஜப்பான் பேராசிரியர் டோசிகிடே மச்காவா (Toshihide Maskawa) டிசம்பர் 8, 2008 அன்று நோபல் பரிசு நிகழ்ச்சியில் அளித்த உரையின் சுருக்கம்.

 

முதலில் நோபல் அமைப்புக்கு எனது நன்றியைத் தெறிவித்துக் கொள்கிறேன். நான் 1940ஆம் ஆண்டு ஜப்பானின் நகோயா நகரத்தில் பிறந்தேன். எனது தந்தை ஒரு மின் பொறியாளராக வேண்டும் என தபால் மூலமாக படித்தார். ஆனால் அடிப்படை கல்வி பெறாததால் அவரால் கணிதத்தின் சைன் கோசைன்களை (sine theeta, cos theeta) புரிந்துகொள்ள முடியவில்லை. முடிவில் ஒரு சிரிய பர்னிச்சர் கடையை தொடங்கினார். பிறகு சர்க்கரை விற்கும் தொழிலுக்கு மாறினார்.

ஆனால், மின்சாரம் பற்றிய அறிவின் மீதான அவரின் ஆவல் மட்டும் தீரவேயில்லை. அவர் அது பற்றி தனது மகனிடம் பேச ஆராம்பித்தார்.

“மின்சார மோட்டார் எவ்வாறு சுழழுகிறது?”

“கிரகனங்கள் ஏன் எல்லா மாதமும் ஏற்படுவதில்லை?”

இது போன்ற கேள்விகளை சிறுவயதிலேயே என்னிடம் கேட்டு அதற்கான விடையையும் என்னிடம் பெறுமையுடன் விவாதித்தார். இதனாலேயே நான் பள்ளியில் வித்தியாசமான மாணவனாக இருந்தேன். பாடங்களில் சரிவர மதிப்பெண்கள் பெறவில்லை. இதனை என் அம்மாவும் உணர ஆரம்பித்தார். ஆசிரியரிடம் சென்று

“என் மகன் வீட்டில் படிப்பதே இல்லை, அவனுக்கு கொஞ்சமாவது வீட்டுப்பாடம் கொடுங்கள்”

எனச் சொன்னார்.

அதற்கு எனது ஆசிரியர்

“நான் தினமும் வீட்டுப்பாடம் தருகிறேன், உங்கள் பையன் தான் செய்வதேயில்லை”

என்று சொன்னார். எப்படியிருக்கும் பாருங்கள். எனக்கு இரண்டு மணிநேரம் அறிவுரை கிடைத்தது.

நான் உயர்பள்ளிக்குச் செல்லும் முன்பு எனக்கு பெரிதாக தூண்டுதல் ஒன்றும் இல்லை. நான் உயர்பள்ளிக்குச் செல்ல ஆரம்பித்த பிறகு நடந்த ஒரு சம்பவமே நான் ஒரு ஆராய்ச்சியாளனாக வேண்டும் என்ற ஆவலை எனக்குத் தூண்டியது. எனது இராண்டாம் ஆண்டில் அந்த செய்தி ஒரு செய்தித்தாளில் வெளிவந்தது. ஜப்பானின் நகோயா பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் சோயிச்சி சகடாவின் கண்டுபிடிப்பைப் பற்றிய செய்திக் கட்டுரை அது.

அப்போது சிறு வயதில், அறிவியலின் அனைத்து கண்டுபிடிப்புகளும் ஐரோப்பாவில் பத்தொண்பதாம் நூற்றாண்டிலேயே முடிந்துவிட்டன என குழந்தைத்தனமாக நினைத்திருந்தேன். ஒருவேளை, பேராசிரியர் சகடாவின் கண்டுபிடிப்பு ஜப்பானின் டோக்கியோ மாநகரில் இருந்து வந்திருந்தால், அதற்கும் எனக்கும் சம்பந்தமேயில்லை என்றுதான் நினைத்திருப்பேன். ஆனால் பாருங்கள், அறிவியல் கண்டுபிடிப்புகள் நான் வசிக்கும் எனது நகோயா நகரிலேயே நடந்துகொண்டிருந்ததன. எனக்கும் அப்படிப்பட்ட ஆராய்ச்சியில் சேர ஆர்வம் வந்தது.

எனது அப்பாவோ தனது மகன் குடும்ப தொழிலை செய்ய வேண்டும் என விரும்பினார். பல்கலைக்கழக நுழைவுத்தேர்வில் தேறினால் மட்டுமே படிப்பைத் தொடர முடியும் என்ற நிலை. சொல்லவா வேண்டும், நன்றாக படித்து தேறினேன். பல்கலைக்கழகத்திலும் சேர்ந்தேன். பாடங்கள் பள்ளிப் பாடங்களைவிட ஆர்வமுடையதாய் இருந்தன. பல்கலைக்கழக பாடங்கள் புதியதாகவும் படிக்கத் தூண்டுவதாகவும் இருந்தன. ஒவ்வொன்றையும் படிக்கும் போதும் அந்தத் துறையிலேயே ஆராய்ச்சியில் ஈடுபடப் போவதாக நண்பர்களிடம் சொல்வேன். 1962ல் இயற்பியல் பட்டப்படிப்பில் சேர்ந்தேன். பேராசிரியர் சகடாவின் ஆய்வுக்கூடத்திலேயே ஆய்வு செய்யும் வாய்ப்பு கிடைத்தது. அங்கு வரும் இயற்பியல் சந்தாப் புத்த்கத்தை முதலில் படிப்பதில் போட்டா போட்டியே நடக்கும். அப்படி நான் படித்த ஆய்வுக் கட்டுரையில் CP violation குறித்து எனக்கு ஒரு கேள்வி எழுந்தது. அந்த கேள்விக்கான விடைகாண முயல்வதை நான் எட்டு ஆண்டுகள் தள்ளிப்போட வேண்டியிருந்தது.

பட்டப்படிப்பை முடித்த பிறகு நகோயா பல்கலைக்கழகத்திலேயே உதவிப் பேராசிரியராக மூன்று ஆண்டுகள் பணியாற்றினேன். பிறகு, 1970ல் கியோட்டோ பல்கலைக்கழகத்தில் சேர்ந்தேன். CP violation குறித்த அந்தக் கேள்விக்கான தீர்வை காண ஆய்வில் ஈடுபடும் நேரம் வந்துவிட்டதாக எனக்குத் தோன்றியது. அதைப்பற்றிய ஆய்வில் ஈடுபட்டிருந்த நகோயாவைச் சேர்ந்த உதவிப் பேராசிரியர் கோபாயாசியும் 1972ல் கியோட்டோ பல்கலைக்கழகத்தில் சேர்ந்தார். நானும் கோபாயாசியும் இணைந்தே அந்த ஆய்வை செய்தோம். இடையில் சில நாட்கள் பல்கலைக்கழகத்தில் ஏற்பட்ட பிரச்சனைகளால் என்னால் ஆய்வில் கவனம் செலுத்த முடியவில்லை. பிறகு கோபாயாசியும் நானும் இயற்பியல் பற்றி விவாதிக்க நேரம் கிடைத்தது. எனது குடும்பத்தோடு செலவிடவும் நேரம் கிடைத்தது. ஆய்வைப்பற்றி சிந்திக்கவும் நேரம் கிடைத்தது. இப்படியாக நாட்கள் கழிந்தன.

ஆக, எங்கள் ஆய்வு வேலையை முடித்துவிட்டோம். இறுதியில் ஆய்வு முடிவிற்குப் பிறகு இப்பொழுது அன்று எழுந்த CP violation குறித்த அந்தக் கேள்விக்கான விடை ஓரளவாவது கிடைத்துள்ளது. அதுவும் நீண்ட ஆய்விற்கும், பல ஆராய்ச்சிக்கும் பிறகு, 30 ஆண்டுகள் கழிந்த பிறகு. இந்தக் கண்டுபிடுப்பை நிகழ்த்துவதற்கு உதவிய அனைவருக்கும் இந்த நேரத்தில் நன்றி சொல்ல விரும்புகிறேன்.

இந்த உரையின் ஆங்கில மூலத்தை Nobel Prize Websiteல் காணவும்.

(CP violation குறித்த கேள்வியைப் புரிந்துகொள்ள பேராசிரியர் கோபாயாசி நோபல் பரிசு நிகழ்ச்சியில் அளித்த உரையை Nobel Prize Websiteல் காணவும்)

Advertisements